உள்ளூர் செய்திகள்

ஷார்ஜாவில் தனது முதல் ஆங்கில நாவலை வெளியிட்ட தமிழக பெண்

ஷார்ஜா : ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் நடந்த 43வது சர்வதேச புத்தகக் கண்காட்சியில் உள்ள புத்தக அரங்கில் தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த பஜிலா நிஜாமுதீன் எழுதிய 'தி பிளாட் பிரின்சஸ்' என்ற ஆங்கில நாவலை ஈடிஏ அஸ்கான் குழுமத்தின் மனிதவளத்துறை முன்னாள் அதிகாரி கீழக்கரை எம். அக்பர் கான் வெளியிட நூலாசிரியர் பெற்றுக் கொண்டார். விழாவில் அவரது பெற்றோர் நிஜாமுதீன், பாரிசா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தனது முதல் நாவலை எழுதி வெளியிட்ட பஜிலா நிஜாமுதீனுக்கு இலக்கிய ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். -நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !