உள்ளூர் செய்திகள்

துபாயில் நடந்த இரத்த தான முகாமில் தமிழர்கள் பங்கேற்பு!!

துபாய் : கடந்த 15 வருட காலமாக இரத்த தான முகாம் நடத்தி வரும் அமீரக ப்ளட் டோனர்ஸ் கேரளா குழுவினருடன் இம்முறை தமிழர்களும் பங்கெடுத்து இரத்தம் வழங்கினர். இக்குழுவில் உறுப்பினராக இருந்து மறைந்த இருவரின் நினைவாக இம்மாதம் நடத்தப்பட்ட இந்த முகாம், ஜடாஃப் பகுதியில் அமைந்துள்ள துபாய் ஹெல்த் அத்தாரிட்டியின் ரத்ததான வங்கியில் நடைபெற்றது. ஏறத்தாழ 300க்கும் அதிகமானோர் பங்கு கொண்ட இந்நிகழ்வில், இரத்த தானம் செய்தவர்களுக்கு, சிற்றுண்டி மற்றும் உணவும் வழங்கப்பட்டது. துபாய் ம்யூசிக் இந்தியா குழு ராகேஷ் மற்றும் நண்பர்கள், கௌசர் பெய்க் நடத்தும் ஹோப் குழுவினர், ஃபுஜைரா ஷீலாவின் அமீரக தமிழ் சங்க உறுப்பினர்கள் உற்சாகத்துடன் பங்கு கொண்டனர். இவர்களை ஒருங்கிணைத்து, முகாமில் வந்தவர்களின் தகவல் பதிவு பணிகளையும் மேற்கொண்டார் ரமா மலர். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !