ராசல் கைமாவில் மரம் நடும் விழா
ராசல் கைமாவில் மரம் நடும் விழாராசல் கைமா: ராசல் கைமாவில் அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் சார்பில் சமூக ஆண்டையொட்டி மரம் நடும் விழா நடந்தது.இந்த மரம் நடும் விழாவுக்கு அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் தலைவி ஹபிபா அல் மராசி தலைமை வகித்தார்.ராசல் கைமா சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் தலைவரும், ராசல் கைமா நிர்வாக கவுன்சிலின் தலைவருமான ஷேக் சலேம் பின் சுல்தான் பின் சகர் அல் காசிமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.பொதுமக்கள், மாணவ, மாணவியர் உள்ளிட்ட ஆயிரத்து 573 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்று மினெய் பகுதியில் 3,791 மரக்கன்றுகளை நட்டனர்.சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் நடந்த மரம் விடும் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.- நமது தினமலர் வாசகர் ஜெயமோகன்