உள்ளூர் செய்திகள்

யுகாதி விழா - 2025

அமீரகத்தில் உம் அல் குவைன் இல் நடைபெற்ற யுகாதி விழாவில் தமிழக தெலுங்கு பேசும் மக்கள் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழா காலையில் கணபதி பூஜை , லக்ஷ்மி பூஜை, குத்து விளக்கு பூஜையுடன் தொடங்கப்பட்டு , செண்டமேளம் முழங்க முளைப்பாரி மாவிளக்கு ஊர்வலத்தை தொடர்ந்து பெண்களின் கும்மி ஆட்டம், அனைத்து வயதினரும் இணைந்து வள்ளி குமியாட்டம் நடைபெற்றது. அனைத்து வயதினருக்கும் ஆன விளையாட்டு போட்டிகள், ஆண்கள் பெண்களுக்கான கயிறு இழுத்தல், பானை உடைத்தல் போட்டிகள் நடைபெற்றன. மழலை செல்வங்களின் நடன நிகழ்ச்சிகள், ஆண்கள் பெண்கள் குழுவின் நடன நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் என சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவை KNA குழுவினர் ஏற்பாடு செய்தனர் - தினமலர் வாசகர் சுதாகர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !