உலக தூய்மைப்படுத்துதல் தின சமூக சேவை
மனாமா: பஹ்ரைனில் செப்., 20 ஆம் தேதி அனுசரிக்கப்பட்ட உலக தூய்மைப்படுத்துதல் தினத்தைக் குறிக்கும் வகையில், 'கிளீன் அப் பஹ்ரைன்' குழு, ஜனாபியா மற்றும் மல்கியா பகுதி கடற்கரைகளில் தூய்மைப்படுத்தும் முயற்சிகளை ஏற்பாடு செய்தது. பல்வேறு குழுக்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களுடன், லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ் சமூக உதவி இயக்கத்தின் தன்னார்வலர்களும் தூய்மைப்படுத்தும் பணியில் பங்கேற்றனர். பஹ்ரைனில் இருந்து நமது செய்தியாளர் காஹிலா.