பஹ்ரைனில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி
பஹ்ரைன்: பஹ்ரைன் இந்திய தூதரகத்தில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சர்வதேச யோகா தினம் விரைவில் நடக்க இருப்பதையொட்டி பஹ்ரைன் இந்திய தூதரகத்தில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. யோகா பயிற்சியாளர் எளிய வகை யோகாசனங்களை செய்ய அதனைப் பின்பற்றி தூதரக அதிகாரிகள், பொதுமக்கள், மாணவ, மாணவியர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். - நமது செய்தியாளர் காஹிலா