உள்ளூர் செய்திகள்

குவைத்தில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி

குவைத்: குவைத்தில் இந்திய தூதரகத்தின் ஆதரவுடன் இந்தியன் லேனர்ஸ் ஓன் அகாடமி பள்ளிக்கூடத்தில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சர்வதேச யோகா தினம் விரைவில் தொடங்க இருக்கும் சூழ்நிலையில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். யோகா பயிற்சியாளர் செய்து காண்பித்த பயிற்சிகளை பின்பற்றி அவர்கள் யோகாவை மேற்கொண்டனர். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !