மஸ்கட் இந்திய தூதரகத்தில் யோகா நிகழ்ச்சி: பல்வேறு நாடுகளின் தூதர்கள் பங்கேற்பு
மஸ்கட் : மஸ்கட் இந்திய தூதரகத்தில் சிறப்பு யோகா நிகழ்ச்சி பல்வேறு நாடுகளின் தூதர்கள், ஓமன் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் அமித் நாரங் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் யோகாவின் முக்கியத்துவம் குறித்தும், இன்றைய இயந்திரமயமான உலகில் நமது உடலுக்கும், மனதுக்கும் முக்கியமானதாக யோகா இருந்து வருவதாக கூறினார். யோகா பயிற்சியாளர்கள் எளிய வகை ஆசனங்களை செய்ய அதனை பின்பற்றி தூதர்கள் உள்ளிட்ட அனைவரும் யோகா பயிற்சியை மேற்கொண்டனர். - நமது செய்தியாளர் காஹிலா