சிங்கப்பூரில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா
முன்னாள் பாரதக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் 94 ஆவது பிறந்த நாள் விழாவை சிங்கப்பூர் அப்துல் கலாம் இலட்சியக் கழகம் மிகச் சிறப்பாக நடத்தியது. வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கல், கலை நிகழ்ச்சிகள், சிறப்புரை என அரங்கம் நிறை விழாவிற்கு அல்ஜீனியட் குழுத் தொகுதி அடித் தள அமைப்பு மதியுரைஞர் ஜகதீஸ்வரன் ராவ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மாணவ, மாணவிகளின் பல்சுவைக் கலை நிகழ்ச்சிகளுக்குப் பின் தமிழக திரைத்துறை ஒளிப்பதிவாளரும் நடிகருமான இளவரசு “ கனவுகள் விதைத்த விவசாயி “ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றி அரங்கைத் தம் வசமாக்கினார். 8 பாயின்ட் என்டர்டெய்ன்மென்ட் அதிபர் அருமைச் சந்திரன் வரவேற்புரை ஆற்றினார். முஸ்லிம் கிட்னி ஏக்சன் அசோசியேஷன் தலைவர் அமீரலிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஏற்பாட்டுக் குழுத் தலைவர் கவிஞர் இறை.மதியழகன் உட்பட பலர் பங்கேற்ற இவ்விழாவில் சுவையேற்றிக் கலைநிகழ்ச்சிகள் படைத்த மாணவ மாணவிகளுக்கு பலத்த கரவொலிக்கிடையே பரிசுகள் வழங்கப்பட்டன. - சிங்கப்பூரிலிருந்து நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்