சிங்கப்பூரில் ஆலயத்தில் நவராத்திரி விழா
சிங்கப்பூர் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலயத்தில் கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதியிலிருந்து மண்டபம்நிறை பக்தர்கள் சூழ நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஐந்தாம் நாள் விழாவில் ஸ்ரீ அம்பிகை அன்ன பூரணியாகவும் ஆறாம் நாள் காமாட்சியாகவும் காட்சியளித்து அருள்பாலிக்கின்றனர். நாள்தோறும் தலைமை அர்ச்சகர் ஆகம ப்ரவீண சிவஸ்ரீ நாகராஜ சிவாச்சாரியார் காட்சி பற்றி விளக்குவது இயல் விருந்தாகவும் கலையரங்கின் நிகழ்வுகள் கண்களுக்கும் செவிகளுக்கும் இசை விருந்தாகவும் அனைத்திற்கும் ஒப்பாக சுரேஷ் குமார் தலைமையிலான மேலாண்மைக் குழுவினர் வழங்கும் அருள் அன்னப் பிரசாதம் வயிற்றுக்கு விருந்தாகவும் ஆலயம் முழுதும் நிரம்பி வழியும் அருள் விருந்து ஸ்ரீ சிவ கிருஷ்ணரும் மூகாம்பிகையும் நல்கும் தெய்வீக நாடக விருந்தாகவும் அமைந்து இப்பகுதியையே பக்திப் பரவசத்தில் ஆழ்த்தி வருகிறது. - நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்