சிங்கப்பூரில் பங்குனி உத்திரப் பெருவிழா கோலாகலம்
சிங்கப்பூர் ஆலயங்களில் பங்குனி உத்திரப் பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது.ஈசூன் புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் நவம்பர் 11 ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. வைகறை முதற்கொண்டே முருகப் பெருமானுக்கு பக்தப் பெருமக்கள் சமர்ப்பித்த பால் காட்டும் அபிஷேகம் கண்கொள்ளாக் காட்சியாக மெய்சிலிர்க்க வைத்தது. மாலையில் சர்வ அலங்கார நாயகராக முருகப் பெருமான் வெள்ளி ரதத்தில் திருவீதி உலா வந்து அருள் பாலித்தார். பக்தப் பெருமக்கள் ஆங்காங்கே பந்தல் அமைத்து வெள்ளி ரதத்தை வரவேற்று வரிசை எடுத்து வழிபட்டனர். முக்கிய பிரமுகர்கள் நாடாளு மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். அவர்கட்கு சிறப்பு செய்யப்பட்டது. ஈசூன் பகுதியே விழாக் கோலம் பூண்டிருந்தது - நமது செய்தியாளர் வெ. புருஷோத்தமன்