உள்ளூர் செய்திகள்

சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரிய புதிய தலைமை நிர்வாக அதிகாரி

சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியம் சரோஜினி பத்மநாதனை அதன் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்துள்ளது. டிசம்பர் 24 ஆம் தேதி அவர் பொறுப்பேற்றார். வாரியத்தின் முதல் பெண் தலைமை நிர்வாக அதிகாரி எனும் பெருமையை சரோஜினி பெறுகிறார். இந்து அறக்கட்டளை வாரிய நிதிப் பிரிவு உறுப்பினராக இதற்கு முன் சேவையாற்றிய இவர் அரசு பொதுச் சுகாதாரம், சமூகம் எனப் பல துறைகளில் திறம்படப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத் தகுந்தாகும். வாரியத்திலிருந்த போது நிதிப் பிரிவையும் நிர்வாக நடைமுறைகளையும் வலுப்படுத்த இவர் உதவியதாக இந்து அறக்கட்டளை வாரியம் குறிப்பிடுகிறது. வாரியம் நிர்வகிக்கும் நான்கு ஆலயங்கள், போதையர் மறு வாழ்வு இல்லம் அதன் திட்டங்கள் குறித்து இவர் நன்கு அறிந்தவர். சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் ஏறத்தாழ 40 ஆண்டுகள் பணியாற்றிய இவர் சுகாாபர அமைச்சு, சுகாதார அறிவியல் ஆணையம் ஆகியவற்றிலும் மூத்த பொறுப்புக்களை வகித்தவர். 2010 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டு வரை சிண்டாவின் தலைமைச் செயலக அதிகாரியாகவும் பொறுப்பேற்றுள்ளார். புதிய பொறுப்பேற்கும் அம்மையாரைப் பாராட்டி வாழ்த்துவோம். - சிங்கப்பூரிலிருந்து நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !