உள்ளூர் செய்திகள்

சிங்கப்பூர் ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஸ்ரீ ஐயப்பன் பூஜை கோலாகலம்

சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஸ்ரீ ஐயப்பன் பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. காலையில் மூல மந்திர ஹோமமும் சிறப்பு நெய் அபிசேகமும் பக்தப் பெருமக்களின் “ சாமியே சரணம் ஐயப்பா ... பொன் ஐயப்பா சரணம் “ எனும் சரண கோசம் முழங்க கண்கொள்ளாக் காட்சியாக நடைபெற்றன. மாலையில் பதினெட்டாம் படி பூஜை கோலாகலமாக நடைபெற்றது. ஐயப்ப பக்தர்களின் பஜனை மெய்சிலிர்க்குமாறு உருக்கத்தோடு நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆலய நிர்வாகம் சிறப்பாகச் செய்திருந்தனர். - நமது செய்தியாளர் வெ.புருசோத்தமன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்