ஹாலிவுட் ரக சண்டையில் ஜெய்
ADDED : 1457 days ago
ஜெய் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'பிரேக்கிங் நியூஸ்'. ரோபோடிக்ஸ் டெக்னாலஜி மற்றும் அனிமேஷனை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் கதாநாயகியாக பானுஸ்ரீ, ‛பிக்பாஸ்' சினேகன், தயாரிப்பாளர் அழகிய தமிழ்மணி, தேவ்கில், ராகுல் தேவ், உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.படத்தில் ஜெய், ரோபோட்ஸ்களுடன் சண்டைபோடும் காட்சிகள் எடுக்கப்பட்டு கிராபிக்ஸ் செய்யும் வேலை நடக்கிறது. படத்தை ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கி வருகிறார்.