கிராபிக்ஸில் ஆர்வம்
ADDED : 1508 days ago
விஜய் படத்தை இயக்க இருந்த ஏ.ஆர்.முருகதாசுக்கு, அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது ஹாலிவுட் தரத்தில் பேசப்படும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் கூடிய படத்தை இயக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். நாயகனுடன் விலங்கு ஒன்றும் முக்கிய பாத்திரமாக நடிக்க உள்ளது. இதற்காக முன்கட்டப்பணியில் முருகதாஸ் ஈடுபட்டுள்ளார். கிராபிக்ஸ் காட்சிகளை முடித்து விட்டு, அதற்கேற்ப படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளார். நாயகன் யார்? படக்குழு உள்ளிட்ட மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.