காஜல் அகர்வால் நடிக்கயிருந்த வேடத்தில் தமன்னா
ADDED : 1441 days ago
கடந்த ஆண்டு கெளதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால், அதன்பிறகும் தான் கமிட்டாகியிருந்த ஆச்சார்யா உள்ளிட்ட சில படங்களில் நடித்து வந்தார். அதோடு, நாகார்ஜூனாவின் கோஸ்ட் படத்திலும் நடிக்க தயாரானார். ஆனால் தான் கர்ப்பமானதை அடுத்து அப்படத்தின் தயாரிப்பாளரிடத்தில் சொல்லிவிட்டு விலகினார் காஜல்.
அதன்பிறகு கோஸ்ட் படத்தில் காஜலுக்கு பதில் இலியானா நடிப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் தற்போது அந்த வேடத்தில் தமன்னாவை நடிக்க வைக்க பேசி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதவிர அஜித்தின் வேதாளம் ரீமேக்கான போலா சங்கர் படத்திலும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக தமிழில் ஸ்ருதிஹாசன் நடித்த வேடத்தில் நடிக்க தமன்னா கமிட்டாகியிருக்கிறார் .