நவ., 26ல் வனம் ரிலீஸ்
ADDED : 1480 days ago
ஸ்ரீகண்டன் ஆனந்த் இயக்கத்தில் வெற்றி, அனு சித்தாரா, ஸ்மிருதி வெங்கட், வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வனம். விக்ரம் மோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரான் ஈத்தன் யோகன் இசையமைத்துள்ளார். மறுஜென்ம கதையில் திரில்லராக உருவாகி உள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. படம் ரிலீஸ் தொடர்பான பணிகள் நடந்து வந்த நிலையில் இப்போது நவ., 26ல் தியேட்டரில் படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோல்டன் ஸ்டார் புரொடக்ஷன் தயாரிக்க, சக்திவேல் பிலிம்ஸ் தமிழகத்தில் வெளியிடுகிறது.