பாலகிருஷ்ணாவுக்கு ஆபரேஷன்
ADDED : 1537 days ago
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான பாலகிருஷ்ணா, அகன்டா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாகவே தோள்பட்டையில் அவருக்கு வலி இருந்தது. தற்போது அந்த வலி தீவிரமாக அதற்காக ஆபரேஷன் செய்து கொண்டுள்ளார். 4 மணிநேரம் நடந்த ஆபரேஷனுக்கு பின் அவர் நலமாக உள்ளார். பாலகிருஷ்ணாவை 6 வாரம் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.