பின்வாங்கும் பீம்லா நாயக்
ADDED : 1434 days ago
மலையாளத்தில் கடந்த வருடம் வெளியாகி வெற்றிபெற்ற அய்யப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகி வருகிறது பீம்லா நாயக். ஒரு ஓய்வுபெற்ற ராணுவ வீரருக்கும் ஒய்வு பெறப்போகின்ற கட்டத்தில் இருக்கும் போலீஸ் அதிகாரிக்கு நடக்கும் ஈகோ மோதல் தான் படத்தின் கதை. பிஜுமேனன்-பிரித்விராஜ் நடித்த கதாபாத்திரங்களில் பவன் கல்யாணும் ராணாவும் நடித்து வருகின்றனர். சாஹர் சந்திரா இந்தப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப்படத்தை வரும் ஜன-12ஆம் தேதி வெளியிடுவதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள். அந்த சமயத்தில் ராதே ஷ்யாம் படம் மட்டும் தான் சங்கராந்தி பண்டிகை ரிலீஸ் போட்டியில் இருந்தது. தற்போது ராஜமவுலி இயக்கியுள்ள ஆர்ஆர்ஆர் படம் ஜன-7ஆம் தேதி வெளியாக இருப்பதால் இந்த இரண்டு படங்களையும் சமாளித்து போட்டியில் தாக்கு பிடிக்க முடியாது என்பதை உணர்ந்து போட்டியில் இருந்து வெளியேறி விட்டது பீம்லா நாயக்.
அனேகமாக அதை தொடர்ந்து வரும் குடியரசு தினமான ஜன-26 அல்லது மார்ச் மாதம் சிவராத்திரி சமயத்தில் இந்தப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.