கமல்ஹாசன் பிறந்தநாள்; முதல்வர் வாழ்த்து
ADDED : 1441 days ago
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் இன்று (நவ.,07) தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான அன்பு நண்பர் கலைஞானி கமல்ஹாசன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நலமுடன் நற்பணிகளைத் தொடர்ந்திர வாழ்த்துகிறேன்,' என்று கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்து கமல்ஹாசன், ‛இனிய நண்பரும் முதல்வர்களில் முன்னுதாரணமாகத் திகழ்பவருமான ஸ்டாலின் அவர்களே, தங்களின் மனப்பூர்வமான வாழ்த்துகள் என் பிறந்தநாளுக்கு மேலும் வர்ணம் சேர்க்கிறது. அன்பும் நன்றியும்,' எனப் பதிவிட்டுள்ளார்.