மீண்டும் சுந்தர்.சி படத்தில் நடிக்கும் ராஷி கண்ணா
ADDED : 1434 days ago
இந்த ஆண்டு ராஷி கண்ணா நடிப்பில் துக்ளக் தர்பார், அரண்மனை-3 ஆகிய படங்கள் திரைக்கு வந்ததை அடுத்து திருச்சிற்றம்பலம், சர்தார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்தநிலையில் அடுத்தபடியாக அரண்மனை-3 படத்தை அடுத்து மீண்டும் சுந்தர்.சி இயக்கும் காமெடி படத்தில் ஜீவாவுடன் இணைந்து நடிக்கிறார் ராஷி கண்ணா. 2022 ஜனவரி மாதம் பொங்கலுக்குப்பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதுதவிர இரண்டு தெலுங்கு படங்களில் நடிக்கும் ராஷி கண்ணா, அஜய்தேவ்கன், ஷாகித்கபூர் இணைந்து நடிக்கும் ஹிந்தி வெப்சீரிஸிலும் நடித்து வருகிறார்.