உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கார்த்தியின் விருமன்

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கார்த்தியின் விருமன்

குட்டிப்புலி, கொம்பன், மருது என பல படங்களை இயக்கியவர் முத்தையா. தற்போது கார்த்தி, அதிதி ஷங்கர், ராஜ்கிரண் நடிப்பில் விருமன் என்ற படத்தை இயக்கி வருகிறார். கொம்பன் படத்தை அடுத்து ஆறு ஆண்டுகளுக்கு பிறகு கார்த்தியுடன் இணைந்துள்ள இந்த படத்தையும் கிராமத்து ஆக்ஷன் கதையிலேயே இயக்கி வருகிறார்.

கடந்த சில மாதங்களாகவே தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இப்படத்தை சூர்யா தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மதுரை, தேனி பகுதிகளில் நடைபெற்று வரும் விருமன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது மதுரையில் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார் கார்த்தி. இதையடுத்து விருமன் படம் 2022ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே திரைக்கு வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !