மலையாள படங்களில் கவனம் செலுத்தும் அபர்ணா பாலமுரளி
மலையாள நடிகையான அபர்ணா பாலமுரளி 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு சர்வம் தாளமயம் படத்தில் நடித்தார். என்றாலும் சூரரைப் போற்று படம்தான் அவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. தற்போது தீதும் நன்றும் என்ற படத்தில் நடித்து வருகிறார். கார்த்தி மற்றும் அசோக் செல்வனுடன் நடிக்க இருக்கிறார்.
இந்த நிலையில் மலையாளத்தில் கூடுதல் அக்கறை செலுத்த தொடங்கி உள்ளார். அவர் நடித்து முடித்துள்ள ஆடுஜீவிதம் படம் வெளிவர இருக்கிறது. உலா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர சமீபத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற திங்களாழ்ச்ச நிக்ஷயம் என்ற படத்தை இயக்கிய சென்னா ஹெக்டே இயக்கும் பத்மினி என்ற படத்தில் டைட்டில் ரோலில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அவருக்கு ஜோடியாக குஞ்சாகோ போபன் நடிக்கிறார். ஸ்ரீராஜ் ரவீந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜேக்ஸ் பிஜாய் இசை அமைக்கிறார்.