விஜய்யின் 67ஆவது படம் : புதிய தகவல்
ADDED : 1422 days ago
நெல்சன் இயக்கி வரும் பீஸ்ட் படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பில் இருக்கும் விஜய் இந்த படத்தை முடித்ததும் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கும் தனது 66ஆவது படத்தில் நடிக்கிறார். தில்ராஜூ தயாரிக்கும் அந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் அடுத்தப்படியாக விஜய்யின் 67ஆவது படத்தை மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குவதாகவும், அந்த படத்தை விஜய்யின் துப்பாக்கி படத்தை தயாரித்த எஸ்.தாணு தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுப்பற்றி லோகேஷ் கனகராஜோ, தயாரிப்பாளர் எஸ்.தாணுவோ உறுதியான தகவல் எதுவும் வெளியிடவில்லை.