3வது முறையாக அஜித் படத்தில் இணையும் அனிருத்?
ADDED : 1410 days ago
நடிகர் அஜித் நடித்த வலிமை படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இதனைத்தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் மேலும் ஒரு படம் நடிக்க அஜித் சம்மதித்துள்ளார்.
இந்த படத்திற்கு யார் இசையமைப்பாளர் என்ற பேச்சு பரவலாக பேசப்பட்டது. போனிகபூர் - எச்.வினோத் - அஜித் கூட்டணியின் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளதால், அடுத்த படத்திற்கும் யுவனே இசையமைப்பார் எனப் பேசப்பட்ட நிலையில், அனிருத் இசையமைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
அனிருத் இதற்கு முன்னதாக வேதாளம், விவேகம் படங்களில் அஜித்துடன் இணைந்த அனிருத், 3வது முறையாக இணையவுள்ளது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேதாளம் படத்தில் ஆலுமா டோலுமா பாடலை மிகப்பெரிய அளவில் ஹிட்டானதற்கு அனிருத்தின் இசையும் ஒரு காரணம்.