டிசம்பர் மாதத்தில் வரிசை கட்டும் படங்கள்
ADDED : 1410 days ago
2021ம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதம் இன்னும் சில நாட்களில் ஆரம்பமாக உள்ளது. இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை கொரானோ இரண்டாவது அலை தாக்கத்தால் தியேட்டர்கள் மூடப்பட்டன. கடந்த சில வாரங்களில் வெளியான சில படங்கள் மக்களை மீண்டும் தியேட்டர்கள் பக்கம் வரவழைத்தன.
ஏற்கெனவே வெளியாக வேண்டிய சில படங்கள் பெரிய நடிகர்களின் படங்களால் வெளியிட முடியாமல் தவித்து வந்தன. அவற்றையும் சேர்த்து இந்த டிசம்பர் மாதத்தில் பல புதிய படங்கள் வெளியாக உள்ளன.
“பேச்சுலர், தள்ளிப் போகாதே, ஜெயில், தேள், முருங்கைக்காய் சிப்ஸ், ஆன்டி இந்தியன், 3.33, பார்டர், பிளான் பண்ணி பண்ணனும், பிசாசு 2, கொம்பு வச்ச சிங்கமடா, யாதும் ஊரே யாவரும் கேளிர், மாமனிதன், கடைசி விவசாயி, காத்து வாக்குல ரெண்டு காதல், ஆனந்தம் விளையாடும் வீடு, இறுதி பக்கம், பன்னிக்குட்டி,” உள்ளிட்ட படங்கள் வரும் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில் கடைசி நேரத்தில் சில மாற்றங்கள் வரலாம்.
2022 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வெளியாக உள்ள சில பெரிய நடிகர்களின் படங்களைப் பற்றிய அறிவிப்புகள் ஏற்கெனவே வெளியாகி உள்ளன. எனவே, அவற்றுடனான மோதலைத் தவிர்க்க டிசம்பர் மாதத்தில் படங்களை வெளியிட பலரும் முயற்சிக்கலாம்.