உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிப்.,4ல் அருண்விஜயின் யானை வெளியீடு?

பிப்.,4ல் அருண்விஜயின் யானை வெளியீடு?

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். பிரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் வருகிற பிப்ரவரி 4-ந்தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தற்போது ஹரி இயக்கத்தில் முதன்முறையாக அருண்விஜய் நடித்துள்ள யானை படமும் பிப்ரவரி 4-ந்தேதி வெளியாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் நடந்து முடிந்துள்ள நிலையில் இறுதிக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. இப்படத்தில் அருண்விஜய்யுடன் பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !