உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கடும் கட்டுப்பாடுகள் விதிக்கும் கத்ரினா, விக்கி கவுசல்

கடும் கட்டுப்பாடுகள் விதிக்கும் கத்ரினா, விக்கி கவுசல்

பாலிவுட்டின் முன்னணி நடிகையான கத்ரினா கைப், நடிகரான விக்கி கவுசல் இருவரும் வரும் டிசம்பர் 9ம் தேதி ராஜஸ்தானில் திருமணம் செய்து கொள்ள உள்ளார்கள். தனியார் ரிசார்ட் ஒன்றில் அவர்களது திருமணம் மூன்று நாள் கொண்டாட்டமாக நடைபெற உள்ளது. இவர்களது திருமணத்திற்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளார்களாம்.

ஆனால், திருமணத்தில் கலந்து கொள்பவர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்களாம். திருமணம் நடைபெற உள் இடத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குப் பிறகு மொபைல் போன்களை எடுத்து வர அனுமதி இல்லையாம்.

மேலும், திருமண நிகழ்வுகள் பற்றி கலந்து கொள்பவர்கள் எந்த ஒரு பதிவையும் சமூக வலைத்தளங்களில் கத்ரினா, விக்கி ஆகியோரின் முன் அனுமதி இல்லாமல் பதிவிடக் கூடாதாம். ஏன் இவ்வளவு கட்டுப்பாடுகள் என பாலிவுட் வட்டாரத்தில் இது பற்றித்தான் தற்போது பேசிக் கொள்கிறார்களாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !