இயக்குனர் சிவாவுக்கு தங்கசெயின் பரிசளித்த ரஜினி
ADDED : 1445 days ago
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, ஜெகபதி பாபு, சூரி உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து தீபாவளிக்கு தியேட்டரில் வெளிவந்த படம் ‛அண்ணாத்த'. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்தன. அதேசமயம் படத்திற்கு ஆரம்பம் முதல் நல்ல வசூல் கிடைத்த நிலையில் தொடர் மழையால் வசூல் பாதிக்கப்பட்டது. படம் பல விதமான விமர்சனத்தை பெற்றாலும், ரஜினியால் வெகுவாக பாராட்டப்பட்டது. இதன் வெற்றியை கொண்டாடும் வகையில் இயக்குனர் சிவா வீட்டுக்கு சென்ற ரஜினி அவருக்கு தங்க செயின் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.