உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முத்துவான சிம்பு

முத்துவான சிம்பு

மாநாடு படத்தின் வெற்றிக்கு பின் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் ‛வெந்து தணிந்தது காடு'. இந்த படத்திற்காக கடும் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் இறுதி கட்டப்படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது. படத்தில் முத்து என்ற பாத்திரத்தில் சிலம்பரசன் நடிக்கிறார். கவுதம் வாசுதேவ் மேனன் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். நாளை படத்தின் முதல் முன்னோட்ட வீடியோவை வெளியிடுகின்றனர். இதுப்பற்றி ‛டிச., 10 முதல் முத்துவின் பயணம் வெளியாகும்' என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !