உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நானி படத்தை பார்த்து கண்கலங்கிய சென்சார் அதிகாரிகள்

நானி படத்தை பார்த்து கண்கலங்கிய சென்சார் அதிகாரிகள்

நானி நடிப்பில் சூப்பர் நேச்சுரல் த்ரில்லராக உருவாகியுள்ள படம் ஷியாம் சிங்கா ராய். இந்தப்படத்தில் நானி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். டாக்ஸிவாலா என்கிற ஹிட் படத்தை கொடுத்த ராகுல் சாங்கரித்யன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் சாய்பல்லவி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப்படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்தநிலையில் சமீபத்தில் இந்தப்படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்தின் முடிவில் கண்கலங்கியதாகவும் எழுந்து நின்று கை தட்டியதாகவும் படம் புதுமையான முயற்சியாக அதேசமயம் எந்தவித குழப்பமும் இன்றி உருவாக்கப்பட்டுள்ளதாக பாராட்டியதாகவும் படக்குழுவினர் ஒரு தகவலை தெரிவித்துள்ளனர். இந்தப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !