கும்கி யானையுடன் போட்டோஷூட் : பிக்பாஸ் ஸ்ருதி அட்ராசிட்டி!!
ADDED : 1370 days ago
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் சுருதி. டஸ்கி ப்யூட்டியான இவர் பிரபல மாடலும் கூட. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன் மீண்டும் போட்டோஷூட்டை ஆரம்பித்துவிட்டார். இண்ஸ்டாகிராமில் அவரது புகைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் அவர் தற்போது பழக்கப்படுத்தப்பட்ட கும்கி யானையின் மீது அமர்ந்து போட்டோஷூட் செய்துள்ளார். யானை அதன் துதிக்கையால், சுருதியை தூக்கி பிடித்திருக்க போட்டோஷூட் நடக்கிறது. இதன் மேக்கிங் வீடியோ சமீபத்தில் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், சிலர் அதை ரசிக்கின்றனர். சிலர் விமர்சித்து வருகின்றனர்.