உதயநிதிக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்
ADDED : 1372 days ago
அருண்ராஜா காமராஜ் இயக்கும் நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்திருக்கும் உதயநிதி அடுத்தபடியாக மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்தில் வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, கீர்த்தி சுரேஷ் நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்திற்கு ஏ .ஆர் .ரஹ்மான் இசையமைக்க ஒப்பந்தமாகி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. எம்எல்ஏவான உதயநிதி அடுத்தபடியாக தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக கூறப்படும் நிலையில் சினிமாவை குறைத்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபட எண்ணி உள்ளார்.