யாஷிகா பகீர்
ADDED : 1372 days ago
இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி போன்ற படங்களில் நடித்த யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். சில மாதங்களுக்கு முன் நண்பர்களுடன் பார்ட்டி போய்விட்டு காரில் திரும்பியவர் விபத்தில் சிக்கினார். இதில் அவரது உயிர்தோழி சம்பவ இடத்திலேயே பலியாக, படுகாயம் அடைந்த இவர் கடந்த நான்கு மாதங்களாக எழுந்த நடக்க முடியாத அளவுக்கு சிகிச்சை பெற்றார். தற்போது சிகிச்சைக்கு பின் மீண்டும் படங்களில் நடிப்பதோடு முன்புபோல் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டோஷூட்டில் பிஸியாக உள்ளார் யாஷிகா.
இந்நிலையில் யாஷிகா அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‛ஆரம்பத்தில் சினிமாவில் வாய்ப்பு தேடும் போது, பல இயக்குனர்கள் என்னிடம் தவறாக நடந்து கொண்டனர். சிலர் கவர்ச்சியாக நடித்துக் காட்டும்படி வற்புறுத்துவர் ஆனால் நான் அதை ஒப்புக் கொள்ளாமல் விலகிவிடுவேன்' எனக் கூறியுள்ளார்.