லாரன்ஸின் "துர்கா" : இயக்குனர்களாக களமிறங்கும் அன்பறிவ்
ADDED : 1425 days ago
ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் காஞ்சனா பெயரில் வெளிவந்த அனைத்து படங்களுமே வெற்றிவாகை சூடி சுமார் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. பேய் படங்களின் வித்தியாச முயற்சிகளுக்கு அடித்தளமிட்டவர் ராகவா லாரன்ஸ். அவர் அடுத்தாக தனது தாயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் படம் துர்கா . இந்த படத்தின் மூலம் இயக்குனர்களாக அறிமுகமாகிறார்கள் இரட்டையர்களான பிரபல ஸ்டண்ட் இயகுநர்கள் அன்பறிவ் இருவரும். மற்ற நடிகர், நடிகைகள், தொழிநுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.