உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரசன்னா - சினேகா

பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரசன்னா - சினேகா

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வரும் பிரசன்னா - சினேகா ஆகிய இருவருக்குமிடையே அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடித்தபோது காதல் மலர்ந்து திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். சமீபகாலமாக பிரசன்னா வில்லன் உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் நடித்து வரும் நிலையில், சினேகாவும் புதிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பிரசன்னாவும், சினேகாவும் தங்களது குடும்பத்தினருடன் இணைந்து பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்கள். அது குறித்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !