சிரஞ்சீவிக்கு கொரோனா
ADDED : 1351 days ago
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி. தற்போதும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள ஆச்சார்யா படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. தற்போது போலோ சங்கர், லூசிபர் ரீ-மேக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவர் கூறுகையில், ‛‛முன்னெச்சரிக்கையுடன் இருந்தும் நேற்றிரவு எனக்கு கொரோனா பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறி தான். வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை பெறுகிறேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார் சிரஞ்சீவி.