உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பீம்பாய்-ஆக நடித்த பிரவீன் குமார் சோப்தி மறைவு

பீம்பாய்-ஆக நடித்த பிரவீன் குமார் சோப்தி மறைவு

‛மகாபாரதம்' தொடரில் பீமனாக நடித்தவர் பிரவீன் குமார் சோப்தி (74). 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், கமலுடன் ‛மைக்கேல் மதன காமராசன்' படத்தில் பீம்பாய் வேடத்தில் கமலின் பாதுகாவலராக நடித்தார். மார்பு தொற்று நோயால் அவதிப்பட்டு வந்த இவர், மாரடைப்பால் காலமானார். நடிகராக மட்டுமின்றி விளையாட்டு வீரராகவும் திகழ்ந்த இவர் ஆசிய மற்றும் காமென்வெல்த் போட்டிகளில் பங்கேற்று விருதுகளை வென்றுள்ளார். எல்லை பாதுகாப்பு படையிலும் சில ஆண்டுகள் பணியாற்றினார். அரசியல் கட்சியிலும் இருந்த இவர் ஆரம்பத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தார். பின்னர் பா.ஜ.வில் இணைந்தார். இவருக்கு மனைவி மற்றும் மகள் உள்ளனர். பிரவீன் குமார் சோப்தியின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !