ஐதராபாத் ஹோட்டலில் தனுஷ்... வைரலாகும் போட்டோ
ADDED : 1328 days ago
தனது அண்ணன் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தில் நடித்து வந்தார் தனுஷ். இதுதவிர தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகும் வாத்தி படத்திலும் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இன்று முதல் ஐதராபாத்தில் மீண்டும் துவங்குகிறது. சம்யுக்தா மேனன் நாயகியாக நடிக்கிறார். இதற்காக ஊட்டியில் இருந்து ஐதராபாத் சென்ற தனுஷ் அங்குள்ள 1900's மிலிட்டரி ஹோட்டலில் உணவு அருந்தியுள்ளார். அந்தபுகைப்படம் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.