சரத்குமாரின் 'இரை' டிரைலரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்
ADDED : 1440 days ago
சரத்குமார் தற்போது இரை என்ற புதிய வெப் தொடர் ஒன்றில் நடித்திருக்கிறார். கடாரம் கொண்டான் படத்தை இயக்கிய ராஜேஷ்.எம் செல்வா இப்படத்தை இயக்கியுள்ளார். ராதிகாவின் ராடன் மீடியா வெர்ஸ் நிறுவனம் தயாரிதத்துள்ளது. ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இந்த வெப் தொடர் அல்லு அர்ஜூனுக்கு சொந்தமான ஆஹா ஓடிடி தளத்தில் வரும் மார்ச்18ம் தேதி வெளியாகிறது. கிரைம் கலந்த திரில்லர் கதைக்களத்தில் உருவாகி உள்ள வெப் தொடரின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.