திவ்யபாரதி, முகேன் ராவ் நடிக்கும் 'மதில் மேல் காதல்'
ADDED : 1316 days ago
நடிகை திவ்யபாரதி நடிப்பில் சமீபத்தில் வெளியான பேச்சுலர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். வெளியான முதல் படத்திலே ரசிகர்களை கவர்ந்தார். அடுத்து நடிகர் கதிருடன் இணைந்து மலையாள படமான இஷ்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்நிலையில் முகேன் ராவுடன் இணைந்து 'மதில் மேல் காதல்' என்ற படத்தில் நடித்துள்ளார். இதனை திவ்யபாரதி அறிவித்துள்ளர். அகிலன் அஞ்சனா இந்தப் படத்தை இயக்குகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் சாக்ஷி அகர்வால் மற்றும் விஜய் டிவி பிரபலம் பாலா ஆகியோர் நடிக்கின்றனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது. அதோடு படத்தின் முதல் பாடலை மார்ச் 3ல் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.