வலிமை படம் குறித்து கமிஷனர் அலுவலகத்தில் புகார்
ADDED : 1320 days ago
வினோத் இயக்கத்தில் அஜித் குமார், ஹுமா குரேஷி, கார்த்திகேயா நடிப்பில் கடந்த 24ஆம் தேதி திரைக்கு வந்துள்ள படம் வலிமை. திரைக்கு வந்து 3 நாட்களில் 100 கோடி வசூலை இப்படம் தாண்டி இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு இரண்டு விதமான விமர்சனங்கள் எழுந்தபோதும் ஞாயிறு வரையில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் அஜித்தின் வலிமை படத்தில் வழக்கறிஞர்கள் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்ட காட்சிகள் இருப்பதாக அப்படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கறிஞர்களை தவறாக சித்தரிக்கும் அந்த காட்சிகளை வலிமை படத்திலிருந்து நீக்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.