உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாலா இயக்கத்தில் மாற்றுத் திறனாளியாக நடிக்கும் சூர்யா?

பாலா இயக்கத்தில் மாற்றுத் திறனாளியாக நடிக்கும் சூர்யா?

பாலா மற்றும் சூர்யா கூட்டணியில் வெளியான நந்தா, பிதாமகன் படங்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தன. மீண்டும் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனமே தயாரிக்கிறது .

கிராம வாழ்வியலை கதைக்களமாக இப்படம் கொண்டுள்ளதாகவும் , இந்தப்படத்தில் சூர்யா காது கேட்காத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது . நீண்ட நாட்களுக்கு பிறகு இணையும் சூர்யா - பாலா கூட்டணியின் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் மதுரையில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !