உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அடுத்த படத்திற்காக உடல் எடையை குறைக்கும் அஜித்

அடுத்த படத்திற்காக உடல் எடையை குறைக்கும் அஜித்

வலிமை படத்திற்கு பிறகு எச்.வினோத் இயக்கும் அஜித்தின் 61 வது படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற மார்ச் 9ஆம் தேதி ஐதராபாத்தில் தொடங்க இருக்கிறது. இதற்காக அங்குள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்டக செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகை அஜித்துக்கு ஜோடியாக அதிதி ராவ் நடிக்கலாம் என கூறப்படுகிறது.

வில்லன் மற்றும் ஹீரோ என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ள அஜித் தனது எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதில் ஒரு கதாபாத்திரத்திற்கு 15 கிலோ எடையும், இன்னொரு கதாபாத்திரத்திற்கு 25 கிலோ வரை எடையும் குறைத்து வித்யாசத்தை காண்பிக்க உள்ளாராம் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !