அஜித்தின் 62 வது படத்தில் நடிக்கும் ஹுசைனி
ADDED : 1309 days ago
அஜித் நடிக்கும் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாக உள்ளது
தற்போது இந்தப் படத்தில் நடிகர் ஹுசைனி நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். ஹுசைனி தமிழில் புன்னகை மன்னன், வேலைக்காரன், ப்ளட் ஸ்டோன் , பறவைகள் பலவிதம், உன்னை சொல்லி குற்றமில்லை தர்மராஜ், வேடன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும் நடித்துள்ளார்.