10,000 சதுர அடியில் வலிமை போஸ்டர்
ADDED : 1309 days ago
அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியான 'வலிமை' திரைப்படம் 25 வது நாளை தொட்டுள்ளது . பல்வேறு திரையரங்குகளில் சிறப்புக்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது .
இந்நிலையில் ஜீ5 ஓடிடி தளத்தில் வலிமை திரைப்படம் வருகின்ற மார்ச் 25 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ஓடிடியில் 'வலிமை' வெளியாகும் தினத்தை, சென்னை YMCA மைதானத்தில் 10,000 சதுர அடி பிரம்மாண்ட போஸ்டர் மூலம் அறிவித்தது ஜீ5 நிறுவனம் .இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .