வேஷ்டி சட்டையில் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா சிவம்
ADDED : 1265 days ago
தொகுப்பாளினியான 'ஐஸ்வர்யா சிவம்' டிவி பிரபலம் என்பதை தாண்டி மாடலாக அறியப்படுகிறார். இவருக்கு ஏராளமான இளைஞர்கள் ரசிகர்களாக உள்ளனர். சமீப காலங்களில் டிவி நிகழ்ச்சிகளில் பெரிய அளவில் தோன்றாத ஐஸ்வர்யா, மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது. 24 மணி நேரமும் விளம்பரங்களையே ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் ஒரு டிவியிலும் சில விளம்பரங்களில் தோன்றியுள்ளார். இந்நிலையில் இன்ஸ்டாவில் ஆண் போல வேட்டி சட்டை அணிந்து, நகைகளும் அணிந்து வித்தியாசமாக போட்டோஷூட் நடத்தியுள்ளார். இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சிலர் மீண்டும் ஐஸ்வர்யாயை டிவியில் பார்க்க வேண்டும் எனவும், சீரியலில் நடிக்க வர வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்துள்ளனர்.