கமலின் விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா
ADDED : 1243 days ago
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து, நடித்துள்ள படம் விக்ரம். விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். வருகிற மே 15ம் தேதி இப்படத்தின் இசை விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. விக்ரம் படத்தில் கமல் எழுதி பாடியுள்ள பத்தல பத்தல என்ற முதல் சிங்கிள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் சூர்யா ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாகவும், அவர் நடித்துள்ள காட்சிகள் படத்தின் கிளைமாக்ஸில் இடம் பெறுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்பு கமல் நடித்த மன்மதன் அம்பு என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.