விஜய்யை வைத்து படம் தயாரிக்கும் கமல்?
ADDED : 1243 days ago
கமல்ஹாசன் தற்போது சினிமா, அரசியல் என இரண்டிலும் பயணித்து கொண்டிருக்கிறார். அதோடு தனது ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தொடர்ச்சியாக படங்களும் தயாரித்து வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகின்ற ஜூன் 3ம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் விஜய்யின் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கயுள்ளார் என்ற செய்தி அண்மையில் வெளியானது. இந்த படத்தை நடிகர் கமல் தனது ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது .