ஜெயம் ரவி - நயன்தாரா நடிக்கும் ‛இறைவன்'
ADDED : 1214 days ago
இயக்குனர் அகமது - ஜெயம் ரவி கூட்டணியில் ‛ஜன கன மன' படம் பாதியிலேயே நிற்கிறது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில், வெளிநாட்டில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் மட்டும் மீதமிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஜெயம் ரவி, நயன்தாராவை வைத்து ‛இறைவன்' என்னும் படத்தை அகமது இயக்கி வந்தார். கொரோனா காரணமாக தள்ளிப்போன படப்பிடிப்பு தற்போது சத்தமே இல்லாமல் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வரும் தீபாவளி அன்று படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதே நாளில் கார்த்தி நடித்துள்ள சர்தார் படமும் வெளியாகிறது.